பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்ப...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவருதல் மற்றும் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.