ஆழ்கடல் மீன்பிடி அவதானிப்பு முறைமையை சீர்செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு.

ஆழ்கடல் மீன்பிடி அவதானிப்பு முறைமையை சீர்செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு.

வி.எம்.எஸ்(Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற...

வி.எம்.எஸ்(Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வி.எம்.எஸ் பொறிமுறையின் வினைத்திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்படும்வரை அதற்கான சேவைக் கடடணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (03.06.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஏற்றுமதி நியமங்களுக்கு அமைய கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஆழ்கடல் மீன்பிடிப் பலநாள் கலங்களுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்> இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் 1500 ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களுக்கு குறித்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த சேவைக் கட்டணமும் அறவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் சுமார் 600 கலங்களில் மாத்திரமே குறித்த கருவி செற்படுவதாகவும் ஆனால் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான செயற்படாத கருவிகளுக்கும் மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் வி.எம்.எஸ் சேவையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குறித்த சேவை வினைத்திறனாக மேற்கொள்ளப்படுவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கும் பொருத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சேவை சீராக தொழிற்படும் வரை மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும், தொடர்பிலக்கம் ஒன்றை வழங்கி அதனூடக வி.எம்.எஸ் கருவிகள் செயற்படாத கலங்களின் உரிமையாளர்கள் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், அமைச்சரின் அறிவுறுத்தலை உடனடியாக நடைமுறைப்படுத்திய கடற்றொழில் திணைக்களம், வி.எம்.எஸ் கருவிகள் தொழிற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளரகள் 0113010031, 0114323389 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தகவல்களை வழங்கினால் அதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை சேவைக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஆழ்கடல் மீன்பிடி அவதானிப்பு முறைமையை சீர்செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு.
ஆழ்கடல் மீன்பிடி அவதானிப்பு முறைமையை சீர்செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்பு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAk1jq555tw29IdxP4MC-JKpbrqYL4Lyf-Pl0RJACMthdNV57QblH_IoQFpZCpX8fNjFxzAmJMXDFOyH7RMB8Zfr89YoxjXfK0LXFH5CaF7lWL0hf_79baM4qd6A3RZ2JW3AMOrT1dtmA/s320/IMG_20200527_190955.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAk1jq555tw29IdxP4MC-JKpbrqYL4Lyf-Pl0RJACMthdNV57QblH_IoQFpZCpX8fNjFxzAmJMXDFOyH7RMB8Zfr89YoxjXfK0LXFH5CaF7lWL0hf_79baM4qd6A3RZ2JW3AMOrT1dtmA/s72-c/IMG_20200527_190955.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/06/blog-post_73.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/06/blog-post_73.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content