ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் ‘பேர் அண்ட் லவ்லி' பிரபலமான தயாரிப்பு ஆகும். இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என்றே ப...
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் ‘பேர் அண்ட் லவ்லி' பிரபலமான தயாரிப்பு ஆகும். இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என்றே பல ஆண்டுகளாக விளம்பரப்படுத்தி வருகிறது ஹிந்துஸ்தான் லீவர்.
இந்நிலையில், இதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனம், தங்களின் தயாரிப்பு பொருளில் உள்ள ‘பேர்’ என்ற வார்த்தையை நீக்கப் போவதாக கூறியுள்ளது. உலகம் முழுவதும் கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இந்தப் போராட்டம் அமெரிக்காவையே முடங்கச் செய்துள்ளது.
கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் எடுத்துள்ளது. இந்தப் பெயரை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அது பெறப்பட்ட பிறகு பெயரை மாற்றப் போவதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளது.