வடமராட்சி கடலில் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுதல் தொடர்பான வழக்கு எதிர்வரும் 4ம் திகதி வரை ஒத்திவைப்பு.

வடமராட்சி கடலில் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுதல் தொடர்பான வழக்கு எதிர்வரும் 4ம் திகதி வரை ஒத்திவைப்பு.

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் ச...

நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மீதான கட்டளை வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என்று பருத்தித்துறை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம்  செய்யப்பட்டது.

வழக்கிற்கு நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்காத காரணத்தால் வழக்கு இன்று  வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பருத்தித்துறை நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி தமது விளக்கத்தை மன்றுரைத்தனர்.

"உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் ஐந்து இது தொடர்பான அனுமதியை வழங்க உரித்துடையன. அவற்றுக்கு எமது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளரால் தென்னிலங்கையைச் சேர்ந்த 57 மீனவர் படகுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது" என்று நீரியல் வள அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

"கடந்த வருடமும் இவ்வாறு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் வந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுக்கு வழங்கிய உரிமத்தில் உள்ள உள்ளக முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது.

அதன்பின்னர் வடமராட்சி கடற்பரப்பிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறியிருந்தனர். அதனால் இந்த நீதிமன்றால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு கட்டளை நீடிக்கப்படாமல் கைவிடப்பட்டுவிட்டது. எனவே அவ்வாறான கட்டளையை மீளவும் வழங்கவேண்டும்" என்று ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்து கட்டளை வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று தவணையிட்ட நீதிமன்று, வழக்கை ஒத்திவைத்தது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடமராட்சி கடலில் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுதல் தொடர்பான வழக்கு எதிர்வரும் 4ம் திகதி வரை ஒத்திவைப்பு.
வடமராட்சி கடலில் சட்டத்துக்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுதல் தொடர்பான வழக்கு எதிர்வரும் 4ம் திகதி வரை ஒத்திவைப்பு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQdwuej2txElz7U-JhMEUYpPl3nkxGHgoA3NWvTo9jH5bSmSLiGxryq7E3BsO3Ajqu-70PlCqWAYavD4hxX7e88ZPeRBB2X6jA6NVRAIsn1kg4TJooFuiTkExQoGATjQ8lNVaH6lXzhOc/s320/IMG-4482.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQdwuej2txElz7U-JhMEUYpPl3nkxGHgoA3NWvTo9jH5bSmSLiGxryq7E3BsO3Ajqu-70PlCqWAYavD4hxX7e88ZPeRBB2X6jA6NVRAIsn1kg4TJooFuiTkExQoGATjQ8lNVaH6lXzhOc/s72-c/IMG-4482.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/4.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/4.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content