கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூ...
கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் முன்னிலையில் நேற்று குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் திணைக்களம், நாரா எனப்படும் நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், நர்ட் நிறுவனம் ஆகியவற்றின் பிரதானிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பல நாள் கலங்களின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி களஞ்சியப்படுத்துவதற்கான பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதே குறித்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், கடற்றொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாக பல நாள் கலங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






