தமிழர் தாயகத்தில் இன்றைய தினம் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்...
தமிழர் தாயகத்தில் இன்றைய தினம் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழல், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் போன்றனவற்றுக்கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



