யாழ் திருநெல்வேலி பொது சந்தை வாசலில் பெண் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்று சுகாதார அதிகாரி அந்த பெண்ணிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது ...
யாழ் திருநெல்வேலி பொது சந்தை வாசலில் பெண் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்று சுகாதார அதிகாரி அந்த பெண்ணிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது பிரதேச சபை ஊழியர் அப் பெண்ணை கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுக்க முற்பட்டதோடு தகாத வார்த்தைகளால் பேசியபடி பிரதேச சபை ஊழியர் ஒருவர் அப் பெண்ணை தாக்க முயன்றுள்ளார்.
இந்த செயலை கண்டித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் பொது வெளியில் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது பெண்களுக்கு எதிரான வன்முறையை காட்டுகின்றது.
இதற்கு நல்லூர் பிரதேச சபை என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்றும் தான் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.