எதிர்வரும் 2020 பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இலக்கம் 2...
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இலக்கம் 2184/34 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால், வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச்சட்டத்தின் 2ஆம் 3ஆம் பிரிவுகளின் கீழ் பொதுத் தேர்தல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்ளுதல், வாக்கு வேண்டி வீடுகளுக்கு செல்லுதல், வேட்பாளரின் தேர்தல் அலுவலக நடைமுறைகள், வாக்களித்தல், வாக்கெண்ணுதல் நடவடிக்கைகள் என்பன தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.