யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாளினை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாளினை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த இரு இளைஞர்களும் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் திட்டமிட்ட வகையிலேயே வாள் வைக்கப்பட்டு கைது நடவடிக்கை இடம்பெற்றதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வாதத்தை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பினை வழங்கியது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
கொழும்புத்துறை பகுதியில் வாளினை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் அண்மையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த நிலையில் அவர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் கோரி ஆயராகிய சட்டத்தரனியின் வாதத்தை அடுத்து அவர்கள் கடந்த 29 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இருதரப்புக்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரன்பாட்டில் திட்டமிட்டு சந்தேகநபர்களின் வீட்டில் வாள் வைக்கப்படே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக மன்றில் ஆஐரான சட்டத்தரணி ஆதாரங்களுடன் வாதிட்டார்.
இதனையடுத்தே குறித்த இருவரும் பினையில் விடுவிக்கப்பட்டனர்.