கும்பம் ராசிக்காரர்களே இதுநாள் வரைக்கும் உங்க ராசிக்கு 5ம் இடத்திலும்,11ம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது சுகஸ்தானமான 4ஆம் இடத்திற்க...
கும்பம் ராசிக்காரர்களே இதுநாள் வரைக்கும் உங்க ராசிக்கு 5ம் இடத்திலும்,11ம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது சுகஸ்தானமான 4ஆம் இடத்திற்கு ராகுவும் தொழில் ஸ்தானமான10இடத்திற்கு கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான். ஆனால் சில தடைகள் தாமதங்கள் ஏற்பட்டு வந்தது நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வருவதால் இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார் ராகு.
வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். நோய் நொடி தொல்லைகள் நீங்கும். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும்.
பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பார்கள். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வசதி வாய்ப்புகள் கூடும்.