நல்லூர் கந்தசுவாமி தெற்கு நுழைவாயிலான யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைக்கப்படவுள்ள வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. வரலாற்றுச் ...
நல்லூர் கந்தசுவாமி தெற்கு நுழைவாயிலான யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைக்கப்படவுள்ள வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.
இதன் முதல் கட்டமாக கிழக்கு புறம் செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு புறமான வீதி வளைவு கோயில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது.