கெரவலப்பிட்டிய மின்சக்தி நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கையின் போது, அதிகாரி ஒருவரினால் இடம்பெற்ற தவறினாலேயே நாடு முழுவதும் மின் விநியோகம் தட...
கெரவலப்பிட்டிய மின்சக்தி நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கையின் போது, அதிகாரி ஒருவரினால் இடம்பெற்ற தவறினாலேயே நாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டதாக, மின்சாரசபையின் மேலதிக பொதுமுகாமையாளர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மின்கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் கூட, இயந்திரங்களை செயற்படுத்து சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, செயலிழந்த இயந்திரங்கள் மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கு இயந்திரங்கள் குளிர்மையடைய வேண்டும்.
அவ்வாறு இயந்திரங்கள் முழுமையாக குளிர்மையடைந்ததன் பின்னரே செயற்படுத்த முடியும் எனவும், அதற்கு சில நாட்கள் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக, மின்சாரசபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கருத்து தெரிவிக்கும் போது
இதன்படி, திடீர் மின்வெட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளிவரவுள்ளதாகவும், அதற்கு அமைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுமெனவும் மின்சாரசபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.