இராஜாங்க அமைச்சு, சுசில் பிரேமஜயந்த, யாழ் எக்ஸ்பிரஸ்
கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னதாக, கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உபாலி சேதர நியமிக்கப்பட்டார்.