இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் ஏற்பாட்டி...
இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் ஆதரவாளர்கள் சிறைகளில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியிருந்தனர்.