ஜேம்ஸ் ஆ அன்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட், யாழ் எக்ஸ்பிரஸ்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் பதிவாகியுள்ளார்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று சவுத்டம்பனில் இடம்பெற்றது
இந்த இறுதி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர் அசார் அலியை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆன்டர்சன் சாதனை படைத்துள்ளார்
இதேவேளை ஜேம்ஸ் ஆன்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது