ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்ச...
ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பூனையில் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (memory card) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.