பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெட்டுபுள்ளி, யாழ் எக்ஸ்பிரஸ்
பல்கலைக்கழக வெட்டுபுள்ளிகளை வெளியிடும் செயற்பாடுகள் தாமதமாகும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல திறனாய்வு சோதனைகள் நடத்தப்படாததாலும், பல திறனாய்வு சோதனை முடிவுகள் வெளியிடப்படாததாலும் 2019 உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக வெட்டுபுள்ளிகளை வெளியிடும் செயற்பாடு தாமதமாகும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்களின்படி, பல்கலைக்கழக வெட்டுபுள்ளிகளை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து திறனாய்வு சோதனை முடிவுகளும் வெளியிடப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து செயற்பாடுகளும் தாமதமாகின. ஊரடங்கு உத்தரவு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள் நடவடிக்கைகளால் வெட்டுபுள்ளிகளை வெளியிடும் செயற்பாடுகள் தாமதமாகியுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் கூறுகின்றன.
பல்கலைக்கழக வெட்டுபுள்ளிகளை வெளியிடும் சரியான திகதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.