ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதன்படி, களனி ரஜமஹா விகாரையில் எதிர...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இதன்படி, களனி ரஜமஹா விகாரையில் எதிர்வரும் 9ஆம் திகதி 8.30 இற்கு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது.
இதற்கமைய, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.