எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர் அனைத்து தேர்தல் சட்டங்களும் அமுல்படுத்தப...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர் அனைத்து தேர்தல் சட்டங்களும் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, வாக்குகளை கோரி வீடுகள் தோறும் செல்லல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், கிளை அலுவலகங்களில் பிரசார பதாகைகள் காட்சிப்படுத்தல் உள்ள அனைத்து வகையான தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் ராஜாங்கனை பகுதிக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அடையாள அட்டை விநியோகமும் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினம் இரவு வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தேர்தல் அதிகார பகுதியில் தலா இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும், வாக்கெண்ணும் நிலையக வளாகத்தில் தமது பிரதநிதிகளை வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.
சூரியவௌ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினை நிறைவு செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோhம்.
ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்தோம்.
அங்கு சர்வதேச விளையாட்டு மைதானத்தையும் அமைத்தோம்.
அத்துடன் சூரியவௌ சர்வதேச கிரிக்கட் மைதானத்தை தாம் அமைத்தோம் என்பதற்காக கடந்த 5 வருடங்களாக அதில் கிரிக்கட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவை எந்த காரணத்திற்காகவும் மக்களிடம் இருந்து மீள பெறபட மாட்டாது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை கைப்பற்றும் என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.