யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டதையடுத்து பிரதான வளாகத்தில் குழுமியிருந்த மாணவர்களால் நேற்று இரவு அங்கு வ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டதையடுத்து பிரதான வளாகத்தில் குழுமியிருந்த மாணவர்களால் நேற்று இரவு அங்கு வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா அவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து பிரதான வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வெடி கொழுத்தியும் கேக் வெட்டியும் கொண்டாடினர் .
அரசியல் தலையீடுகளையும் தாண்டி நீண்ட காலத்திற்கு பின்னர் பல்கலைக்கழக பேரவையின் மதிப்பீட்டின்படியும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரைகளுடன் ஜனாதிபதியின் நியமனம் அமைந்தமை மாணவர்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .