ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சி...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் தமது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை நியமிப்பதற்கும் குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதனை நியமிப்பதற்கும் ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.