குருநாகல் குளியாப்பிட்டிய சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. கம்புரப்பொல, கல்பொல, நாரங்கொட, அலஹிட்டியாவ...
கம்புரப்பொல, கல்பொல, நாரங்கொட, அலஹிட்டியாவ ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
குளியாப்பிட்டி பொலிஸஸார் விசேட குழு அமைத்து இவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கின்றதா இல்லையா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.