சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் நேற்று இரவு யாழ் விசேட அதிரடிபொலிஸ் பிரிவினரா...
சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் நேற்று இரவு யாழ் விசேட அதிரடிபொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.
யாழ் விசேட அதிரடி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெக்கப்பட்டது.
குறித்த கடலாமைகள் கொழும்புத்துறை வள்ளுவர்புரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைப்பற்றப்பட்டன.இதன் போது 36 வயது உடைய வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடலாமைகள்,மற்றும் வீட்டு உரிமையாளரும் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் யாழ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.