முகக்கவசத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கணேமுல்லை, கலஹிட்டியவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. கணேமுல்லை...
முகக்கவசத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கணேமுல்லை, கலஹிட்டியவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கணேமுல்லை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை சோதனையிட்டபோது, அவரது முகக்வசத்திற்குள் 7 சிறிய ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
36 வயதுடைய சந்தேக நபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.