முட்டையின் விலை நாளை முதல் இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ர...
முட்டையின் விலை நாளை முதல் இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை முதல் வௌ்ளை முட்டையின் விலை 18 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 18 ரூபா 50 சதமாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.