பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் ஈடுபட்டார். ருகுணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று கதிர்காமம் கிரிவெகர ரஜமஹா விகாரையில் தாதுகோபுர வழிபாட்டில் ஈடுபட்டார்.
ருகுணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கர், கதிர்காமம் சாஷனாரக்ஷக சபையின் தலைவர் கிரிவெகர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்த பிரதமர் அவரது நலன் விசாரித்து ஆசி பெற்றார்.
பின்னர், கதிர்காமம் ஆலய வளாகத்திற்கு வருகைத்தந்து அஷ்டஎல போதியில் வழிபாடு நடத்தினார்.
குறித்த மத வழிபாட்டில் கதிர்காமம் அபிநவாராமாதிபதி ருகுணு மாகம்பத்துவே சங்கநாயக்கர் கப்புகம சரணதிஸ்ஸ தேரர் மற்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, கதிர்காமம் பிரதேச சபை தலைவர் சானக அமில ரங்கன, ருகுணு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவண் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.