கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய...
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சாலியபுர பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்தார்.