தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலுக்கு அருகில் கடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்வு செய்வதற்காக அரசாங்க இரசாயன ப...
தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலுக்கு அருகில் கடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்வு செய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைத்திற்கு ஒப்படைக்குமாறு சட்ட அதிபர் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
“MT New Diamond“ கப்பலில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் பரவியுள்ள எண்ணெய் கசிவு டீசல் அல்லாத தார் போன்ற விஷேட வகையான எண்ணெய் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தினர் சட்டமா அதிபருக்கு இன்று (09) அறிவித்துள்ளனர்.
நேற்று மற்றும் இன்று இரு முறைகள் குறித்த கடல் பகுதியில் எண்ணெக்கசிவு இடம்பெற்றுள்ளதுடன் அதனை கடற்படையினர் இராசாயன பொருட்களூடாக அழித்துள்ளனர்.