யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதான வீதியில் இருபாலை தேவாலயத்துக்கு அண்மையில் யாழிலிருந்து இருபாலை நோக்கி பயணித்த உழவு இயந்திரமும் மோட்டார் ...
யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதான வீதியில் இருபாலை தேவாலயத்துக்கு அண்மையில் யாழிலிருந்து இருபாலை நோக்கி பயணித்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேற்று காலை மோதி விபத்துக்குள்ளானது
பிரதான வீதியில் பயணித்த உழவு இயந்திரம் சிறு வீதிக்கு திரும்ப
முற்படுகையில் உழவு இயந்திரத்திற்கு பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்தின் பெரிய டயருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்தில் மோட்டார்சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது விபத்துச் சம்பவம் தொடர்பில் கோப்பாய்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.