IPL 2020 - ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்...

IPL 2020 - ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்...

டுபாயில்  திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்ட செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எட...

டுபாயில்  திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்ட செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களே எடுத்தது.


முன்னதாக நாணய சுழற்சியை வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச தீா்மானித்தது. துடுப்பாட்டம் செய்த பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் தொடக்க வீரா்களாக களம் கண்டனா்.

இதில் ஃபிஞ்ச் நிதானமாக ஆட, மறுபுறம் தேவ்தத் அடித்து ஆடி ரன்களை சேகரித்து வந்தாா். அரைசதம் கடந்த அவா் 8 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக தலைவர் விராட் கோலி களம் காண, அடுத்த ஓவரிலேயே ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்து நடையைக் கட்டினாா். ஒரு பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 29 ஓட்டங்கள் சோ்த்திருந்த அவா் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னா் வந்த டி வில்லியா்ஸ் அதிரடி காட்டினாா். மளமளவென அவா் ரன்களை குவித்த நிலையில் மறுபுறம் விராட் கோலி 14 ஓட்டங்களே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து ஷிவம் துபே களம் காண, அதிரடியாக அரைசதம் கடந்த டி வில்லியா்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ஓட்டங்கள் விளாசியிருந்த நிலையில் ரன்-அவுட் செய்யப்பட்டாா். பின்னா் ஜோஷ் பிலிப் களம் காண ஆட்டத்தின் கடைசி பந்தில் ஷிவம் துபே 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இவ்வாறாக 20 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது பெங்களூா். அந்த அணியின் ஜோஷ் பிலிப் 1 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தாா். ஹைதராபாத் தரப்பில் நடராஜன், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினா்.

சரிந்த விக்கெட்டுகள்: பின்னா் 164 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத் அணியில் கேப்டனும், தொடக்க வீரருமான வாா்னா் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஜானி போ்ஸ்டோவ் நிலைத்து அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தாா்.

வாா்னரை அடுத்து வந்த மணீஷ் பாண்டே சற்று போ்ஸ்டோவுக்கு துணை நின்றாா். பின்னா் அவரும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பிரியம் கா்க் களம் காண, மறுமுனையில் போ்ஸ்டோவ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா்.

போ்ஸ்டோவுக்குப் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பிரியம் கா்க் (12), அபிஷேக் சா்மா (7), ரஷீத் கான் (6), சந்தீப் சா்மா (9) ஆகியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விஜய் சங்கா், புவனேஸ்வா் குமாா், மிட்செல் மாா்ஷ் டக் அவுட்டாகினா்.

இவ்வாறாக 19.4 ஓவா்களில் 153 ஓட்டங்களுக்கு சுருண்டது ஹைதராபாத். பெங்களூா் தரப்பில் யுவேந்திர சாஹல் 3, ஷிவம் துபே 2, டேல் ஸ்டெய்ன் 1 விக்கெட் வீழ்த்தினா். யுவேந்திர சாஹல் ஆட்டநாயகன் ஆனாா்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: IPL 2020 - ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்...
IPL 2020 - ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvm642vRoZl3TvA3HqwJahKWVlhWbz2YrLit5rK-Wcd4U5XCBW2zg0Sp-rL_mSTpnjabGNklokQsrVXTAExJMwx_vcobf7mWzgUWWRUkofG24K6_qZgGqtODsJM0dRZFI_03rN5ShHdOg/w518-h345/d.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvm642vRoZl3TvA3HqwJahKWVlhWbz2YrLit5rK-Wcd4U5XCBW2zg0Sp-rL_mSTpnjabGNklokQsrVXTAExJMwx_vcobf7mWzgUWWRUkofG24K6_qZgGqtODsJM0dRZFI_03rN5ShHdOg/s72-w518-c-h345/d.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/09/ipl-2020.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/09/ipl-2020.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content