எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து தீயணைப்பு பணிக்கான 442 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்து...
எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து தீயணைப்பு பணிக்கான 442 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமுத்திர சூழல் பாதிப்புக்கான பணம் அதுவல்ல என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே, சமுத்திர சூழல் பாதி;ப்புக்கான் இழப்பீட்டை, அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இழப்பீடு மற்றும் செலவாக, இலங்கை அரசாங்கம் கோரிய, 442 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, எம்.ரி நியூ டயமன்ட் கப்பலின் உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நிப்புண விமலசேகர குறிப்பிட்டுள்ளார்.