யாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 8 வீடுகளில் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டர்கள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்ப...
யாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 8 வீடுகளில் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டர்கள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்குவில் சபாபதி ஒழுங்கை, பழைய தபால் கந்தோர் ஒழுங்கை, அச்சுக்கூட ஒழுங்கை, தலையாளி, போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளிலே இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அந்த இடங்களிலேயே இருப்பதாகவும் இரவு நேரங்களில் நடமாடுவது சி.சி.ரி.விகமெராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் வீடுகளில் இறங்கும் திருடர்கள் கைக்கு அகப்படும் இலத்திரனியல் பொருள்கள் உட்பட வாழைக்குழை, அம்மி தொடக்கம் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை என மேலும் தெரிவிக்கின்றனர்.