பயனாளர்கள் எப்போதும் குழுவில் இருந்தோ தனிநபர்களிடமிருந்தோ பெறும் தகவல்களை முடக்குவதற்கு( mute) அனுமதிக்கும் புதிய அம்சத்தின் வெளியீட்டை வட்ஸ...
பயனாளர்கள் எப்போதும் குழுவில் இருந்தோ தனிநபர்களிடமிருந்தோ பெறும் தகவல்களை முடக்குவதற்கு( mute) அனுமதிக்கும் புதிய அம்சத்தின் வெளியீட்டை வட்ஸ்அப் அறிவித்துள்ளது.
வட்ஸ்அப் பல ஆண்டுகளாக பயனாளர்களை குழுவிடமிருந்தோ தனிநபர்களிடமிருந்தோ பெறும் தகவல்களை முடக்க அனுமதிக்கிறது.(mute) சமீபத்திய வட்ஸ்அப் புதுப்பிப்புக்கு முன்பு, பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு அரட்டையை எட்டு மணி நேரம், ஒரு வாரம், ஒரு வருடம் என முடக்கமுடியும்.
அன்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ்க்கான புதிய வட்ஸ்அப் புதுப்பிப்பு பயனர்களை அரட்டையை எப்போதும் ( always mute) முடக்க அனுமதிக்கும் .
வட்ஸ்அப் “1 ஆண்டு” என்கிற தெரிவை “எப்போதும்” என மாற்றியுள்ளது. அன்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் பயன்பாடுகளில் பல மாதங்களாக வாட்ஸ்அப் பீட்டா சோதனையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் இருந்தது.
எப்போதும் முடக்கு (always mute) அம்சம் ஒரு பெரிய புதுப்பிப்பாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவில் இருந்தோ தனிநபர்களிடமிருந்தோ அறிவிப்புகளைப் பெற விரும்பாதவர்களுக்கு நிச்சயமாக இது உதவியாக இருக்கும்.