ஈ.ரி.ஐ நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட மேலும் சில மோசடிகள் தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெல...
ஈ.ரி.ஐ நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட மேலும் சில மோசடிகள் தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்காக ஜனாதிபதி விடுத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈ.ஏ.பி ஊடக வலையமைப்பு உள்ளிட்ட ஈ.ரி.ஐ நிறுவனத்தின் சொத்து விற்பனை சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் விசாரணை ஊடாக அண்மையில் தெரியவந்துள்ளது.
ஈ.ரி.ஐ பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோர் ரகசிய கணக்குகள் ஊடாக வைப்பாளர்களின் மில்லியன் கணக்கான பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.