யாழ்.வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதா...
யாழ்.வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையை வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
சங்கானை மீன் சந்தையில் மதுபான பாவனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.
அண்மைய நாள்களாக சங்கானை சந்தையில் வெள்ளிக்கிழமைகளில் மதுபாவனையில் வியாபாரிகள் ஈடுபடுவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் மீன் சந்தைக்கு நேரில் சென்று மதுபாவனையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்ததாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.