வலி வடக்கு பிரதேசத்தில் மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களின் அழைப்பை ஏற்று இன்று நேரில் சென்று பார்வையிட்ட சட்டத்தரணி மணிவண்ணன், மக்கள் குறைகள...
வலி வடக்கு பிரதேசத்தில் மக்கள் பிரச்சனை தொடர்பாக மக்களின் அழைப்பை ஏற்று இன்று நேரில் சென்று பார்வையிட்ட சட்டத்தரணி மணிவண்ணன், மக்கள் குறைகள் மற்றும் பிரச்சினையை தொடர்பில் கவனம் செலுத்தினார். குறித்த இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை எற்படுத்தி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வைத்தார்.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், சிவகாந்தன் தனுஐன், விளையாட்டு துறை பொறுப்பாளர் திரு வீரா, வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு லகிந்தன், மற்றும் கனகசபை விஷ்ணுகாந் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.