இலங்கை வருகின்ற அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை ...
இலங்கை வருகின்ற அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அமெரிக்க வான் படைக்கு சொந்தமான ஆர்.சி.எச் 1815 என்ற விமானத்தில் அவர்கள் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இது தவிர கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 13 அமெரிக்கர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.