நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதிநாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென பிரதி பொ...
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதிநாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 44 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு வார இறுதியில் பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு செயலணியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊரடங்கு உத்தரவு குறித்த எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.