வெள்ளவத்தை கொலிங்வூட் பிளேஸில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கந்தக்காடு சிகிச்சை மையத்திற்...
வெள்ளவத்தை கொலிங்வூட் பிளேஸில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் கந்தக்காடு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பேலியகொட மீன் சந்தையின் பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், தற்போது தனிமைப்படுத்தப்பட்டள்ள களனி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மவுண்ட் லவனியாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் வாகன சாரதியாக பணியாற்றும் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.