காலியில் உள்ள அக்மீமன பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய ச...
காலியில் உள்ள அக்மீமன பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம் தெரிவித்துள்ளது.
அவருக்கு இதுவரை கொரோனா வைரஸ் எவ்வாறு பரவிஇருக்கும் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மையம் அறிவித்தது.
அவர் வெளிநாடு செல்ல விரும்பியதால் ஒரு தனியார் மருத்துவமனையில் பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டபோது இது தெரியவந்ததாக மையம் கூறுகிறது.
அவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான விதம் இன்னும் ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும், அவரது சகோதரர் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் மையம் மேலும் கூறுகிறது.