குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றன. உடுவில...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றன.
உடுவில், கொடிகாமம், வல்லிபுரம் மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடுகளை யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார பயனாளிகளிடம் கையளித்தார்.
இதன் ஒரு நிகழ்வு யாழ்.பருத்தித்துறை வல்லிபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன், கட்டளைத் தளபதிகள் மற்றும் உதவி வளங்குனர் .அதிகரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.