நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திவுலபிட்டியவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் 16 வயதான பிள்ளை...
திவுலபிட்டியவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் 16 வயதான பிள்ளைக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியும், கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவருமான ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.