மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம...
மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வௌியிட்ட அறிக்கையின் படி இலங்கையில் புதிதாக மேலும் 283 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10,220 ஆக அதிகரித்துள்ளது.