வடக்கு மாகாணத்தில் இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் - சுகாதார பணிப்பாளர் தகவல்.

வடக்கு மாகாணத்தில் இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் - சுகாதார பணிப்பாளர் தகவல்.

வட மாகாணத்தில்     கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார ...

வட மாகாணத்தில்     கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். 


வடக்கு மாகாணத்தில் தற்போதைய
நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்


வட மாகாணத்தில்    கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்

 மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் 

இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 நோயாளர்களும் இனங்கானபட்டுள்ளார்கள். 

கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செய்யப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் நேற்று முன்தினம் 378 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது நேற்று 385 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலே தனிமைப்படுத்தல் முகாம்களில் ,சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 

புதிதாக வடமாகாணத்தில் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் கடந்த வாரத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான பரிசோதனைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றோம் 

மேலும் வட மாகாணத்தை பொறுத்த வரைக்கும் தற்போது  யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பாசையூர் மேற்கு திருநகர் பகுதி அதேபோல கரவெட்டி ராஜகிராமம் பிரிவிலும் 4 கிராமங்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த 19ம் திகதி முதல் இயங்க ஆரம்பித்திருந்தது. 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தார்கள். இவர்களில் முதலாவது தொகுதியாக 16 பேர் இரண்டு வார கால சிகிச்சை நிறைவு செய்து இன்று தங்களுடைய வீடுகளுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் 

அதேபோல கிளிநொச்சியில் கிருஸ்ணபுரத்திலும் முல்லைத்தீவு மாங்குளத்திலும் இந்த வாரத்தில் சிகிச்சை நிலையங்கள் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 தற்போது இலங்கை முழுவதும் இந்த கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தற்போது பரவி வருகின்ற இந்த வைரஸ் மிகவும் வீரியம் மிக்கது. அதன்  நோயின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இரண்டு விடயங்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இயலுமானவரை ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அதற்காக கடந்த வாரம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற செயலணி கூட்டத்தின்போது பொதுமக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன 

அவற்றினை நாங்கள் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்  அதாவது முககவசம் மற்றும் சமூக இடைவெளி மற்றும்  கை கழுவுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனாதொற்று பரம்பலை கட்டுப்படுத்தகூடியதாக இருக்கும் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,383,Jaffna,3284,lanka,8577,medical,7,Medicial,39,sports,323,swiss,15,technology,79,Trending,4197,Videos,10,World,571,Yarlexpress,4266,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடக்கு மாகாணத்தில் இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் - சுகாதார பணிப்பாளர் தகவல்.
வடக்கு மாகாணத்தில் இதுவரை 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் - சுகாதார பணிப்பாளர் தகவல்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEA6qSC8qgxi7Vu9AHR1Cu8Cbdb1EQRM1WLnhErthTKVYk3QCzYNoqmfP7XFhivXvhmi1wYS7-w-y-DpwOWvgQWxu0Ltew2SAb8NY5_nK8HYayQY6GBWvl0_DI2Xb8vfZZtT8uYNfipfQ/s320/1604308216083_20201005_143418.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEA6qSC8qgxi7Vu9AHR1Cu8Cbdb1EQRM1WLnhErthTKVYk3QCzYNoqmfP7XFhivXvhmi1wYS7-w-y-DpwOWvgQWxu0Ltew2SAb8NY5_nK8HYayQY6GBWvl0_DI2Xb8vfZZtT8uYNfipfQ/s72-c/1604308216083_20201005_143418.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/11/59.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/11/59.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content