மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு செய்ய முடியாது என்று கூறி ஆலய இளையவர்களினால் செய்யப்பட்ட எற்படுகளை கால...
மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு செய்ய முடியாது என்று கூறி ஆலய இளையவர்களினால் செய்யப்பட்ட எற்படுகளை கால்களினால் தட்டி சுன்னாகம் போலீஸார் அட்டகாசம் செய்தனர்.
கார்த்திகை மாதத்தில் சர்வாலய தீபம் மற்றும் குமராலய தீபம் என்பன இன்று சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இணுவில் கந்தசுவாமி கோவில் மற்றும் மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்தில் கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கப்பானை ஏற்பாடுகள் நடைபெற்ற போது அதனை தடுக்க அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதாக கூறி நிகழ்வுக்கு தடை விதித்தனர்.
இதனையடுத்து இந்த விடயத்தில் தலையிட்டு சம்பவ இடத்திற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று இளையவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் உடனடியாகவே இந்த சம்பவத்தில் தலையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் தொடர்பு கொண்டு நிகழ்வை தடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
. இன்றைய தினம் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபமேற்றுவதையும் சொக்கப்பானை எரிப்பதையும் தடுக்க வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டதையடுத்து பொலிஸார் கோவில் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கினர்.