110 மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலையான தும்மலதெனிய முஸ்லிம் வித்தியாலயத்தில் சுமார் 8 வருடங்களுக்கு பிறகு ஐந்தாம் தர புலமை பரிசில்பரீட்சையில...
110 மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலையான தும்மலதெனிய முஸ்லிம் வித்தியாலயத்தில் சுமார் 8 வருடங்களுக்கு பிறகு ஐந்தாம் தர புலமை பரிசில்பரீட்சையில் எட்டு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அதில் செல்வி மொஹம்மட் சிராஜ் ஹாஜரா என்ற மாணவி 163 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடியுள்ளார்.
மேலும் ஒரு விடயம் என்னவென்றால் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளை ஐந்து மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களை ஊக்குவித்த இப்பாடசாலை அதிபர் S.L.M பிர்தௌஸ் அவர்களுக்கும் வகுப்பாசிரியரான A.வாயிஷா பேகம் ஆசிரியைக்கும் தரம்1 முதல் தரம்5 வரை கற்பித்த ஆசிரியர்கள் உட்பட பாடசாலை ஆசிரியர் குழாத்துக்கும் ஊர்மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.