தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று நிறைவ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட இருந்தது.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அதே நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். இந்நிலையில் இரண்டு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.