வலிகாம்ம் மேற்கு பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் சபை...
தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் சபைக்கூட்டம் ஆரம்பமானதும் தவிசாளர் வரவுசெலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கிகாரத்திற்காக சபைக்கு சமர்ப்பித்து வாக்கெடுப்பு பகிரங்கமாகவா இரகசியமாகவா என சபையோரை வினாவினார் .சபையோர் பகிரங்கமாக என தெரிவித்ததை தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் உட்பட 9 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6 பேர், ஈழமக்கள் ஐனநாயக கட்சி 4 பேர், ஐக்கிய தேசியகட்சி 3 பேர், சுயேட்சைக் குழு 2 பேர், சுதந்திர கட்சி ஒருவரென மொத்தம் 25 உறுப்பினர்களை கொண்ட சபையில் சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு காரணம் சபையினரால் கேட்டபோது கட்சியின் கொள்கைக்காக ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்தார். ஒருவர் எதிர்ப்புடன் 24 பேரின் ஆதரவுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.