கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை...
“கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.