இன்று யாழ்ப்பாணம் வருகை தரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணம...
இன்று யாழ்ப்பாணம் வருகை தரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய கட்டடம் இன்று விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளது .
அத்துடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட கூட்டமொன்றிலும் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாது நடந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தமை தெரிந்ததே.